'பாரத் கவுரவ்' கர்நாடகாவில் இருந்து காசி தரிசனம் 'தட்சிண யாத்திரை' ரயிலில் சுற்றுலா
பெங்களூரு : கர்நாடக மாநில மக்களுக்காக ஐ.ஆர்.சி.டி.சி.,யும், மாநில ஹிந்து அறநிலையத் துறை அமைச்சகமும் இணைந்து, கர்நாடகாவில் இருந்து தட்சிண யாத்திரை, காசி தரிசனம் செய்ய, 'பாரத் கவுரவ்' சுற்றுலா ரயில் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
காசி தரிசனம் கர்நாடகாவில் இருந்து காசி தரிசனம் செய்ய, ஆக., 31ம் தேதி முதல் செப்., 8ம் தேதி வரை ஒன்பது நாள் ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், காசி விஸ்வநாதர் கோவில், துளசி மந்திர் மற்றும் சங்கட் மோச்சன் ஹனுமன் மந்திர், அயோத்தி பாலராமர் கோவில் மற்றும் ஹனுமன் கார்ஹி, கயா மற்றும் புத்கயா, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமம் மற்றும் ஹனுமன் கோவில்களை தரிசனம் செய்யலாம்.
ஒருவருக்கு கட்டணம் 22,500 ரூபாய். இதில், மாநில அரசு, 7,500 ரூபாய் மானியம் வழங்குகிறது. எனவே, சுற்றுலா செல்ல விரும்புவோர் 15,000 ரூபாய் செலுத்தினால் போதும்.
எஸ்.எம்.வி.டி., பெங்களூரு / யஷ்வந்த்பூர், துமகூரு, பிரூர், தாவணகெரே, ஹாவேரி, ஹூப்பள்ளி, பெலகாவி ரயில் நிலையங்களில் ஏறலாம்.
தட்சிண யாத்திரை கர்நாடகாவில் இருந்து தட்சிண யாத்திரை செல்ல, செப்., 11 முதல் 16ம் தேதி வரை ஆறு நாட்கள் ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இருந்து புறப்படும் ரயில், கன்னியாகுமாரி பகவதி கோவில், சுவாமி விவேகானந்தர் பாறை, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், மதுரை மீனாட்சி கோவில்களில் தரிசனம் செய்யலாம்.
இச்சுற்றுலாவுக்கு ஒருவருக்கு 15,000 ரூபாயாகும். இதில், 5,000 ரூபாய் மாநில அரசு மானியம் வழங்குகிறது. எனவே, சுற்றுலா செல்ல விரும்புவோர் 10,000 ரூபாய் செலுத்தினால் போதுமானது.
கர்நாடகாவின் பெலகாவி, ஹூப்பள்ளி, ஹாவேரி, தாவணகெரே, பிரூர், துமகூரு, எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ரயில் நிலையங்களில் இருந்து ரயிலில் ஏறலாம்
இவ்விரு ஆன்மிக சுற்றுலாவும், மூன்று பேர் துாங்கும் 'ஏசி' வசதி கொண்ட, 'பாரத் கவுரவ்' ரயிலில் செல்லலாம். ஹோட்டல்களில் 'ஏசி' அல்லாத அறை வழங்கப்படும். சைவ உணவு மட்டுமே பரிமாறப்படும். ஏசி அல்லாத பஸ்களில் அழைத்துச் செல்லப்படுவர்.
மேலும் விபரங்களை பெங்களூரு - 90031 40710 / 85959 31290 / 85959 31291 / 85959 31292, மைசூரு - 85959 31294 மற்றும் ஹூப்பள்ளி - 85959 31293 என்ற மொபைல் எண்ணில் அல்லது www.irctctourism.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும்
-
கோலாரை சேர்ந்த பெண்ணுக்கு இதுவரை கண்டிராத புது வகை ரத்தம்
-
ஆன்லைன் மோசடி வழக்கு: மும்பை ஆசாமிகள் கைது புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் அதிரடி
-
எலக்ட்ரிக் பைக் பேட்டரி சரி செய்யாத மோட்டார்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு
-
புதுச்சேரி தலைமை செயலகத்தை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு
-
கொள்ளையடிக்க திட்டம்: நெய்வேலியில் 9 பேர் கைது
-
நெஞ்சுவலியால் ரயில்வே மேலாளர் திடீர் மரணம்