5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் தமிழர் பூபாலனுக்கு கூடுதல் பொறுப்பு

பெங்களூரு : கர்நாடகாவில் 5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ் ஐ.ஏ.எஸ்., பூபாலனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

 காத்திருப்போர் பட்டியலில் இருந்த கங்குபாய் ரமேஷ் மனேகர், தொழிலாளர் நலத் துறையின் ஊழியர் காப்பீட்டு திட்ட கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்

 காத்திருப்போர் பட்டியலில் இருந்த சந்திரசேகர், கர்நாடக பட்டு சந்தைப்படுத்துதல் கழக நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்

 காத்திருப்போர் பட்டியலில் இருந்த சோமசேகர், ரூரல் மேம்பாட்டு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்

 மூத்த குடிமக்களுக்கு மின்னணு சாதனங்கள் வழங்கும் துறையின் இயக்குநராக இருந்த அபர்ணா ரமேஷ், பெங்களூரு வணிக வரி துறையின் சேவை ஆராய்ச்சி பிரிவு ஆணையராக நியமனம்

 பெங்களூரு வணிக வரி துறையின் சேவை ஆராய்ச்சி பிரிவு ஆணையர் கனிஷ்கா, பெங்களூரு வணிக வரி துறையின் அமலாக்கப் பிரிவு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்

 அபர்ணா ரமேஷ் வகித்து வந்த மூத்த குடிமக்களுக்கு மின்னணு சாதனங்கள் வழங்கும் துறையின் இயக்குநர் பதவி, இ - கவர்னஸ் சி.இ.ஓ., பூபாலனுக்கு கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

பூபாலன் தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement