கனமழை, மோசமான வானிலை: அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

ஸ்ரீநகர்: மோசமான காலநிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜம்முகாஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகை கோயிலுக்கான இந்தாண்டு யாத்திரை ஜூலை 3ம் தேதி தொடங்கியது. ஆக.9ம் தேதி வரை யாத்திரை நடைபெற இருக்கிறது.
குகைக் கோயிலுக்குச் செல்ல பாரம்பரிய வழித்தடங்களாக பஹல்காம் பாதை மற்றும் குறுகிய பால்டால் பாதை பயன்படுத்தப்படுகிறது. அமர்நாத் யாத்திரை தொடங்கி தற்போது நடைபெற்று வந்தாலும் மோசமான வானிலை காரணமாக இரு வழிகளிலும் இந்த யாத்திரை இன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அவர்கள் கூறி இருப்பதாவது;
அமர்நாத் யாத்திரை ஜூலை 30ம் தேதி இரு வழிகளிலும் (பஹல்காம் பால்டால்) நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இங்கு கடுமையான மழை பெய்து வருகிறது.
நுன்வான், சந்தன்வாரி முகாம்களில் இருந்து பயணம் அனுமதிக்கப்படவில்லை. தற்போது வரை 3.93 லட்சம் யாத்ரீகர்கள் அமர்நாத் கோயிலை தரிசித்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
அங்குள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், யாத்திரை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக முகாம்களில் இருந்து பக்தர்கள் பயணம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 31ம்தேத பகவதி நகர், பால்டால, நுன்வான் முகாம்களில் எந்த போக்குவரத்தும் அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும்
-
'எச்.பி.வி.' வைரஸ் தடுப்பூசி வருவது எப்போது; அரசு மருத்துவமனைகளில் இலவச விநியோகம் வேண்டும்
-
கவின் ஆணவப்படுகொலையில் முதல்வர் மவுனம் சாதிப்பது ஏன் ; 'எவிடென்ஸ்' கதிர் கேள்வி
-
போலீசாரின் பணி சவாலானது: ஜவகல் ஸ்ரீநாத் புகழாரம்
-
கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவு; த.வெ.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு பாதிப்பு
-
2026 தினசரி காலண்டர் 'சிலிப்'பில் இரண்டு தேதிகள் செலவும் குறையும், விலையும் குறைவு
-
ஆங்கிலேயர்கள் அடைக்கப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டணா சிறை