போதை கும்பல் துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலி

குயிட்டோ: ஈக்வடாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குழந்தை உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களால், பல ஆண்டுகளாக வன்முறை அதிகரித்து வருகிறது.

'லாஸ் சோனெரோஸ்' என்ற மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலும் அதற்கு எதிரணியாக உள்ள, 'லாஸ் லோபோஸ்' என்ற கும்பலும் அடிக்கடி குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடலோர மாகாணமான குவாயாஸில் உள்ள எல் எம்பால்ம் என்ற சிறிய நகரில் அமைந்துள்ள மதுக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.

இரண்டு வாகனங்களில் வந்த கும்பல், பாரில் இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில் ஒரு குழந்தை உட்பட 17 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement