உலக விளையாட்டு செய்திகள்

காலிறுதியில் பிரான்ஸ்
பெல்கிரேடு: செர்பியாவில் நடக்கும் 'யூரோ' கூடைப்பந்து (18 வயது) 'ரவுண்டு-16' போட்டியில் பிரான்ஸ், பல்கேரியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 76-72 என வெற்றி பெற்றது. மற்றொரு காலிறுதியில் ஜெர்மனி அணி 89-62 என சுவீடனை வீழ்த்தியது.


பவுச்சர்டு 'குட்-பை'

மான்ட்ரியல்: கனடாவில் நடக்கும் நேஷனல் பாங்க் ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் கனடாவின் பவுச்சர்டு 2-6, 6-3, 4-6 என சுவிட்சர்லாந்தின் பென்சிக்கிடம் தோல்வியடைந்தார். சொந்த மண்ணில் சர்வதேச டென்னிஸ் அரங்கில் இருந்து ஓய்வை அறிவித்தார் பவுச்சர்டு 31.


சபாஷ் சுவீடன்

போட்கோரிகா: மான்டினெக்ரோவில் நடக்கும் பெண்களுக்கான (17 வயது) ஐரோப்பிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் சுவீடன் அணி 30-24 என துருக்கியை வீழ்த்தியது. டென்மார்க், ஸ்பெயின் மோதிய போட்டி 28-28 என 'டிரா' ஆனது.


மான்செஸ்டர் அபாரம்

சிகாகோ: அமெரிக்காவில் நடந்த பிரிமியர் லீக் கால்பந்து 'சம்மர் சீரிஸ்' போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட், போர்ன்மவுத் அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த மான்செஸ்டர் யுனைடெட் அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.


எக்ஸ்டிராஸ்

* டில்லியில், வரும் ஆக. 23-28ல் சீனியர் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் நடக்கவுள்ளது.


* ஆந்திராவின் காக்கிநாடாவில், ஜூனியர் பெண்கள் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 15வது சீசன் இன்று துவங்குகிறது. மொத்தம் 30 அணிகள், 'டிவிசன்-ஏ, பி, சி' என 3 பிரிவுகளாக விளையாடுகின்றன.


* புரோ கபடி லீக் 12வது சீசனுக்கான லீக் போட்டிகள் விசாகப்பட்டினம் (ஆக. 29-செப். 11), ஜெய்ப்பூர் (செப். 12-27), சென்னை (செப். 29-அக். 12), டில்லி (அக். 13-23) என, 4 இடங்களில் நடக்கவுள்ளன. 'பிளே-ஆப்' அட்டவணை பின்னர் வெளியிடப்படும்.


* மால்டாவில், வரும் 2027ல் காமன்வெல்த் யூத் விளையாட்டு நடக்கவுள்ளது. இதில் 74 நாடுகளை சேர்ந்த, 14 முதல் 18 வயதுக்குட்பட்ட 1000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், 8 வகையான விளையாட்டில் பங்கேற்கவுள்ளன.


* அசாமின் கோக்ரஜாரில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் போடோலாந்து எப்.சி., அணி 2-1 என்ற கோல் கணக்கில் கர்பி அங்லாங் மார்னிங் ஸ்டார் எப்.சி., அணியை வீழ்த்தியது.

Advertisement