வங்கதேசத்தில் ஹிந்துக்கள் வீடுகளுக்கு தீவைப்பு

2

டாக்கா: வங்கதேசத்தில், 17 வயது சிறுவன், முஸ்லிம் மதம் தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்து கிராமத்தில் புகுந்து வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, கடந்தாண்டு பதவி விலகியதைத் தொடர்ந்து, அங்கு ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கத் துவங்கியது.

ஹிந்து கோவில்கள் இடிக்கப்படுவதும், ஹிந்துக்கள் தாக்கப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது.

இந்நிலையில், ரங்பூர் மாவட்டத்தில் உள்ள அல்தாத்பூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், சமூக வலை தளத்தில், ஒரு பதிவை வெளியிட்டார்.

முஸ்லிம் மதம் குறித்து அவதுாறாக பதிவிட்ட தாகக் கூறி அக்கிராமத்தில் புகுந்த கும்பல் ஒன்று வன்முறையில் இறங்கியது.

தொடர்ந்து இரண்டு நாட்களாக அந்த கிராமத்தில் உள்ள ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், வீடுகளுக்கும் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.

ராணுவம் வந்த பிறகே, வன்முறை கும்பல் நேற்று கலைந்து சென்றது.

Advertisement