திவ்யாவுக்கு உற்சாக வரவேற்பு * நாக்பூர் விமான நிலையத்தில்...

நாக்பூர்: இந்தியா திரும்பிய உலக கோப்பை செஸ், சாம்பியன் திவ்யாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜார்ஜியாவில் பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர் நடந்தது. இதில், அசத்திய 19 வயது திவ்யா உலக கோப்பை கைப்பற்றினார்.
செஸ் உலக கோப்பை வென்ற முதல் இந்திய வீராங்கனை, இளம் வீராங்கனை என சாதனை படைத்தார். தவிர, இந்தியாவின் 88வது 'கிராண்ட் மாஸ்டர்' ஆனார். இந்த அந்தஸ்து பெற்ற இந்தியாவின் 4வது, சர்வதேச அரங்கில் 44வது வீராங்கனை ஆனார்.
நேற்று திவ்யா, இந்தியா திரும்பினார். மும்பையில் இருந்து நாக்பூர் விமான நிலையத்தை அடைந்த திவ்யாவுக்கு, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். பின் காரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து திவ்யா கூறியது: ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியாக உள்ளது. சுவிட்சர்லாந்து தொடருக்கு முன் இம்மாதம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன். எனது முதல் பயிற்சியாளர் மறைந்த ராகுல் 40. எப்படியும் நான் 'கிராண்ட் மாஸ்டர்' ஆகிவிட வேண்டும் என விரும்பினார். தற்போது கிடைத்த பட்டத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.
மற்றபடி, கால்பந்து, டென்னிஸ் போட்டிகளை பார்ப்பேன். எனக்கென பிடித்த விளையாட்டு நட்சத்திரங்கள் என யாரும் கிடையாது. ஆனால் உலக கோப்பை தொடரில் தடகள ஜாம்பவான் மில்கா சிங், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் எனக்கு துாண்டுகோலாக இருந்தனர்.
பைனலில் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் தான் விளையாடினேன். கடைசி நேரத்தில் ஹம்பி செய்த தவறு, எனது வெற்றிக்கு கைகொடுத்தது.
எனது வெற்றிக்குப் பின் பெண்கள் செஸ் போட்டியை அதிகளவு தேர்வு செய்து விளையாடுவர் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
நிமிஷா பிரியாவின் தண்டனை இன்னும் ரத்தாகவில்லை: காப்பாற்ற அனைத்து முயற்சியும் மேற்கொள்வதாக அரசு அறிவிப்பு
-
புதிய திட்டங்களுக்கு முதல்வர் பெயர் பயன்படுத்த தடை விதித்தது ஐகோர்ட்
-
அயர்லாந்தில் இந்தியர்கள் மீது கொடூர தாக்குதல்; எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
-
பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபா நூற்றாண்டு விழா: பிரதமர் மோடி பங்கேற்க விருப்பம்
-
ஆக.17ல் பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்: ராமதாஸ் அறிவிப்பு
-
71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: ' பார்க்கிங் ' படத்துக்கு 3 தேசிய விருது