பிரிட்டனுக்கான ஆடை ஏற்றுமதி: மூன்று ஆண்டில், 2 மடங்கு உயரும்!

திருப்பூர்: ''வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால், பிரிட்டனுக்கான ஆடை ஏற்றுமதி, அடுத்த மூன்று ஆண்டுகளில், இரண்டு மடங்கு உயரும்,'' என, ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல் கூறியதாவது:
இந்தியா - பிரிட்டன் இடையே, வரலாற்று சிறப்பு வாய்ந்த வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தொலை நோக்கு பார்வையுடன் கூடிய ஒப்பந்தத்தால், வர்த்தகம் பெருகும். ஐரோப்பிய யூனியனுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தையும் விரைவில் சுமூகமாக அமையும்; அதற்காக, அமைச்சர் நீண்ட நாட்களாக முயற்சித்து வருகிறார். பிரிட்டனுடனான ஒப்பந்தத்ததால், இந்தியாவின் தற்போதைய ஆடை ஏற்றுமதி, 12 ஆயிரத்து, 750 கோடி ரூபாய் (1.5 பில்லியன் டாலர் ) அடுத்த மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர வாய்ப்புள்ளது.
வேலை வாய்ப்பு அதிகரிப்பதுடன், பெண் தொழிலாளர்கள் அதிகம் பயன்பெறுவர். வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு, திருப்பூரில் பாராட்டு விழா நடத்த இருப்பதாக அழைப்பு விடுத்தோம்; அமைச்சரும், விரைவில் வருவதாக உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
பகிங்ஹாம் - உத்தண்டி கடல் வரை மூடு கால்வாய்தப்புமா தென்சென்னை? பருவமழை பாதிப்பை தடுக்க நீர்வளத்துறை முயற்சி
-
மாணவரை காரை ஏற்றி கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் சரண்
-
செய்திகள் சில வரிகளில்
-
நள்ளிரவில் உறவினர்கள் தாக்குதல் காதல் ஜோடியை மீட்ட போலீசார்
-
'மெட்ரோ'வில் 150 கி.மீ., நடைபாதை
-
பெண் துாய்மை பணியாளர் உயிரிழப்பு இழப்பீடு வழங்கக்கோரி போராட்டம்