பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு பாதுகாப்பு தர வானதி கோரிக்கை
கோவை: பெட்ரோல் பங்க் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்வதால், சமூக விரோதிகள் பெட்ரோல் பங்க்குகளை தாக்குவதும், அங்குள்ளவர்களை கொலை செய்வதும் அதிகரித்துள்ளது.
போலீசார் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்என்று, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன்வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
ஜூன் 30 அன்று, கல்பாக்கம் அருகே, குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுத்ததற்காக ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை செய்யப்பட்டார்.
இதை கண்டித்து, வணிகர்கள் மறியல் செய்தனர்.சிவகங்கை மாவட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி, எஸ்.பி.யிடம் மனு அளித்துள்ளனர்.
பெட்ரோல் பங்க் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்வதால், சமூக விரோதிகள் பெட்ரோல் பங்க்குகளை தாக்குவதும், அங்கு பணிபுரிபவர்களை கொலை செய்வதும் அதிகரித்துள்ளது.
அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
திவ்யாவுக்கு உற்சாக வரவேற்பு * நாக்பூர் விமான நிலையத்தில்...
-
ஸ்குவாஷ்: இந்தியா வெண்கலம்
-
காலிறுதியில் லக்சயா, தருண் * மக்காவ் ஓபன் பாட்மின்டனில்...
-
4 ஆண்டு ராணுவ ஆட்சி முடிகிறது: மியான்மரில் தேர்தல் நடத்த திட்டம்
-
கன்னியாகுமரியில் ஓய்வுபெற்ற நாளில் ஓடியே வீட்டுக்கு வந்த எஸ்எஸ்ஐ
-
உலக விளையாட்டு செய்திகள்