நெல்லை ஆணவக்கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்: எஸ்.ஐ., கைது

9

சென்னை: நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே இந்த வழக்கில் குற்றவாளியின் தந்தையான எஸ்.ஐ., சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர்.


@1brதுாத்துக்குடி அருகே ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை தமிழ்ச்செல்வியின் மகன் கவின் 27. சென்னை துரைப்பாக்கத்தில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். துாத்துக்குடியில் தனியார் பள்ளியில் படித்தபோது உடன் படித்த மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவியுடன் காதல் ஏற்பட்டது. அந்த பெண் திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் சித்தா டாக்டராக பணிபுரிகிறார்.



உடல் நலம் பாதிக்கப்பட்ட தாத்தாவை காதலி பணியாற்றும் மருத்துவமனைக்கு கவின் அழைத்து சென்றார். ஜூலை 27 மதியம் 3:00 மணிக்கு கவினை சமாதான பேச்சு வார்த்தைக்கு டூவீலரில் அழைத்துச் சென்ற காதலியின் தம்பி சுர்ஜித் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இச்சம்பவம் ஆணவக்கொலையாக கருதப்பட்டது.



தமிழ்ச்செல்வி புகாரின் அடிப்படையில் எஸ்.ஐ.,களான பெண்ணின் தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கொலை செய்த சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார். சுதந்திரமான, நியாயமான, பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்ய இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படுவதாக டிஜிபி கூறியுள்ளார்.

எஸ்.ஐ., கைது



கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தந்தையான எஸ்.ஐ., சரவணனை இன்று இரவு( ஜூலை 30) போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement