கொலையுண்ட கவின் உடன் என்ன உறவு: தோழி வீடியோ வெளியீடு

19

திருநெல்வேலி: ''எனக்கும், கவினுக்கும் என்ன நடந்தது என்று எனக்கும், அவனுக்கும் மட்டும் தான் தெரியும்'' என்று கொலை செய்யப்பட்ட கவினின் தோழி வீடியோ வெளியிட்டுள்ளார்.


@1brநெல்லையில் இளைஞர் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்த வாலிபர் சுர்ஜித்தின் அக்காவும், கவினின் தோழியுமான சித்த மருத்துவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:


நானும் கவினும் உண்மையாக காதலித்தோம். எனக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது.
அப்பாகிட்ட சுர்ஜித் இந்த தகவலை சொல்லிவிட்டான். அப்பா என்னிடம் கேட்டார். காதலிக்கிறாயா என அப்பா கேட்டார். அப்போது இல்லை என கூறிவிட்டேன்.
ஏனெனில் கவின் என்னிடம் நேரம் கேட்டிருந்தான். அதனால் அப்பாவிடம் காதல் குறித்த தகவலை சொல்லவில்லை.


இதற்கிடையில் கவினுக்கும், சுர்ஜித்துக்கும் என்ன உரையாடல் நடந்தது என எனக்கு தெரியவில்லை. சுர்ஜித் கவினை தொடர்பு கொண்டு பெண் கேட்க வாருங்கள்.
உங்கள் திருமணம் முடிந்தால் தான் எனது வாழ்க்கை குறித்து திட்டமிட முடியும்.
27ம் தேதி என்ன நடந்தது என்றால் அன்று கவின் வருவது எனக்கு தெரியாது. 28ம் தேதி மாலையில் தான் அவனை வரச் சொல்லி இருந்தேன்.


27ம் தேதி மதியம் கேடிசி நகருக்கு வந்த பிறகு தான் எனக்கு தெரியும். எனது மருத்துவமனைக்குள் வந்தான். அவனின் அம்மா மற்றும் பாட்டியிடம் தான் நான் பேசிக் கொண்டிருந்தேன். இருவரும் கிளம்பும்போதுதான் கவின் எங்கே என்று நாங்கள் யோசித்தோம். அவர்களின் சிகிச்சை குறித்து நான் கூறிக் கொண்டிருந்தேன். அதற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டது.


எனக்கும், கவினுக்கும் என்ன நடந்தது என்று எனக்கும், அவனுக்கும் மட்டும் தான் தெரியும்.
எங்களது ரிலேஷன் ஷிப் பற்றியும், எங்களது இரண்டு பேரை பற்றியும் இனி யாரும் தப்பாக பேச வேண்டாம். யாருக்குமே ஏதும் தெரியாது. உண்மை தெரியாமல் யாரும் நிறைய பேச வேண்டாம். எனது அப்பா, அம்மாவுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமுமே கிடையாது.


அவங்களை பனிஷ் (தண்டிக்க) பண்ண வேண்டும் என்று நினைப்பது தவறு, அவங்களை விட்டுருங்கள். இவ்வளவு சிச்சுவேஷனில், எல்லாரும் அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை எல்லாமே பேசி விட்டீர்கள். தயவு செய்து இனி யாரும் இதைப் பற்றி பேச வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement