கல்வித் துறை அமைச்சர் தொகுதியில் மாணவி தற்கொலை; அண்ணாமலை ஆவேசம்

சென்னை: மாணவி தற்கொலை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷின் சொந்தத் தொகுதியான திருவெறும்பூர் துவாக்குடியில் இயங்கி வரும் அரசு மாதிரி பள்ளியில், 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஜூன் மாதம், இதே பள்ளியில் மற்றுமொரு பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்திருந்தார்.
துவாக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், தமிழகம் முழுவதுமிருந்து மாணவர்கள், தமிழக அரசு நடத்தும் விடுதியில் தங்கிப் படிக்கிறார்கள். இந்த நிலையில், அடுத்தடுத்து இரண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது, பலத்த கேள்விகளை எழுப்புகிறது.
உடனடியாக, மாணவர் தற்கொலை குறித்த முழு விசாரணை நடத்தி, மேலும் இது போன்ற துயர நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கடந்த ஜூன் மாதம் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்த விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்தும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும்.
மேலும், மாணவர்களைத் தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்க, பள்ளிகளில் மனநல ஆலோசகர்களை நியமிப்பது குறித்துப் பலமுறை கேள்வி எழுப்பியிருந்தோம். இந்த நியமனங்கள் குறித்த முழு விவரங்களையும், பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் கடமை. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (13)
Padmasridharan - சென்னை,இந்தியா
31 ஜூலை,2025 - 23:08 Report Abuse

0
0
Reply
K.n. Dhasarathan - chennai,இந்தியா
31 ஜூலை,2025 - 21:26 Report Abuse

0
0
Nava - Thanjavur,இந்தியா
01 ஆக்,2025 - 06:49Report Abuse

0
0
vivek - ,
01 ஆக்,2025 - 08:15Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
31 ஜூலை,2025 - 21:21 Report Abuse

0
0
Reply
Sambath - ,இந்தியா
31 ஜூலை,2025 - 18:26 Report Abuse

0
0
Reply
Vel1954 Palani - ,இந்தியா
31 ஜூலை,2025 - 18:15 Report Abuse

0
0
Reply
Apposthalan samlin - sulaymaniyah,இந்தியா
31 ஜூலை,2025 - 17:18 Report Abuse

0
0
vivek - ,
31 ஜூலை,2025 - 18:45Report Abuse

0
0
Reply
Mario - London,இந்தியா
31 ஜூலை,2025 - 16:27 Report Abuse

0
0
vivek - ,
31 ஜூலை,2025 - 16:43Report Abuse

0
0
கண்ணன்,மேலூர் - ,
31 ஜூலை,2025 - 17:15Report Abuse

0
0
Reply
GSR - Coimbatore,இந்தியா
31 ஜூலை,2025 - 15:15 Report Abuse

0
0
Reply
மேலும்
-
இந்தியா மீதான புதிய வரி விதிப்பு; ஆக.,7க்கு தள்ளி வைத்தார் டிரம்ப்
-
அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு விவகாரம்; இபிஎஸ் மனு தள்ளுபடி
-
கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த போலீஸ்காருக்கு பளார்; ஆந்திராவில் அமைச்சரின் சகோதரர் கைது
-
டிரம்ப் வரி விதிப்பு விவகாரத்தை வெற்றிகரமாக சமாளிப்பது எப்படி: யு.ஏ.இ., அதிபருடன் மோடி பேச்சு!
-
பயங்கரவாதிகள் முளைவிடும் இடத்திலேயே வேரோடு அழிப்போம்: பார்லியில் சிங்கமென கர்ஜித்த மோடி!
-
தோப்புக்கரணம் போட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி; பொறுப்பேற்ற 36 மணிநேரத்தில் பணியிட மாற்றம்
Advertisement
Advertisement