இறந்த நிலையில் இந்திய பொருளாதாரம்: ராகுல் கடும் தாக்கு

புதுடில்லி: இறந்த நிலையில் இந்திய பொருளாதாரம் இருப்பதாகவும், இது பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் தவிர அனைவரும் தெரிந்து வைத்துள்ளனர் என காங்., முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பார்லி., வளாகத்தின் வெளியே நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
''இந்தியாவில் பா.ஜ., அரசு பொருளாதாரத்தை சீரழித்துள்ளது. இந்திய வெளியுறவு கொள்கை மற்றும் பாதுகாப்பு துறை மத்திய அரசால் கீழ் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்திய பொருளாதாரம் இறந்த நிலையில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகிய இருவருக்கு மட்டும் தெரியவில்லை. கவுதம் அதானிக்கு ஏற்ப உதவி செய்து இந்திய பொருளாதாரம் சீரழிக்கப்படுகிறது'' என்றார்.
இந்தியா குறித்து அமெரிக்க அதிபர் விமர்சனம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ; @quote@
"ஆம் டிரம்ப் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். இவர் உண்மையை சொல்லி இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் டிரம்ப் சொல்வது போலத்தான் செயல்படுத்தப்படுகிறது. quote
ஒரு புறம் அமெரிக்கா கடுமையாக இந்தியாவை விமர்சிக்கிறது. மறுபுறம் சீனா உங்களை மிரட்டுகிறது. ஆனால் இந்திய வெளியுறவு துறை கொள்கை சிறப்பாக உள்ளதாக அமைச்சர் கூறுகிறார். உலகம் முழுவதும் எம்பிக்கள் குழுவை அனுப்பினீர்களே எந்த நாடாவது பாகிஸ்தானை கண்டித்ததா ? இந்த நாட்டை எப்படி நடத்தி செல்வது என்று ஆளும் அரசாங்கத்திற்கு தெரியவில்லை. இவ்வாறு ராகுல் கூறினார்.









மேலும்
-
இந்தியா மீதான புதிய வரி விதிப்பு; ஆக.,7க்கு தள்ளி வைத்தார் டிரம்ப்
-
அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு விவகாரம்; இபிஎஸ் மனு தள்ளுபடி
-
கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த போலீஸ்காருக்கு பளார்; ஆந்திராவில் அமைச்சரின் சகோதரர் கைது
-
டிரம்ப் வரி விதிப்பு விவகாரத்தை வெற்றிகரமாக சமாளிப்பது எப்படி: யு.ஏ.இ., அதிபருடன் மோடி பேச்சு!
-
பயங்கரவாதிகள் முளைவிடும் இடத்திலேயே வேரோடு அழிப்போம்: பார்லியில் சிங்கமென கர்ஜித்த மோடி!
-
தோப்புக்கரணம் போட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி; பொறுப்பேற்ற 36 மணிநேரத்தில் பணியிட மாற்றம்