இத்தாலியில் கார் நேருக்கு நேர் மோதி விபத்து: புகழ் பெற்ற பார்பி டிசைனர்கள் பலி

ரோம்:இத்தாலியில் நடந்த கார் விபத்தில் புகழ்பெற்ற பார்பி வடிவமைப்பாளர்கள் மரியோ பாலினோ 52, கியானி க்ரோஸி 55, ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏ4 டூரின்-மிலன் நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. 82 வயது நபர் தவறான பாதையில் காரை ஓட்டிச் சென்றபோது எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது.
எதிரே வந்த காரில் மரியோ பாலினோ மற்றும் கியானி க்ரோஸி இருவரும் பலியானார்கள். இவர்களுடன் வங்கி ஊழியரான அமோடியோ வலேரியோ கியுர்னி மற்றும் அவரது மனைவி சில்வியா மொரமக்ரோ இருந்தனர்.
கியுர்னி சம்பவ இடத்திலேயே இறந்தாலும், அவரது மனைவி மொரமக்ரோ ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எகிடியோ செரியானோ என அடையாளம் காணப்பட்ட முதியவரும் விபத்தில் இறந்தார்.
மரியோ பாலினோ மற்றும் கியானி க்ரோஸி ஆகியோரின் இன்ஸ்டாகிராமல், பார்பி குழு மரியோ பக்லினோ மற்றும் கியானி க்ரோஸி ஆகியோரை இழந்ததால் மனம் உடைந்துவிட்டது, அவர்கள் இரண்டு பொக்கிஷமான படைப்பாளிகள் அவர்கள் பார்பி உலகிற்கு மகிழ்ச்சியையும் கலைத்திறனையும் கொண்டு வந்தவர்கள் என்று கூறி பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும்
-
டிஎஸ்பி சுந்தரேசன் குற்றம் சாட்டிய இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
-
ஊழல் குற்றச்சாட்டு: லிதுவேனியா பிரதமர் திடீர் ராஜினாமா
-
கனமழை, வெள்ளம் பாதிப்பால் சீனாவில் 44 பேர் பலி
-
ஜாதியும், மதமும் தான் இங்கு அரசியலை தீர்மானிக்கிறது; சீமான் ஆவேசம்
-
ஊர்க்காவல் படையினர் பிரச்னைக்கு இதுதான் காரணம்: சொல்கிறார் சீமான்
-
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்