உயிர் காக்கும் கடவுள் டாக்டர்கள்; ரஷ்யாவில் கடும் நிலநடுக்கத்தின் போதும் அறுவை சிகிச்சை செய்யும் வீடியோ வைரல்!

மாஸ்கோ: ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் டாக்டர்கள் நோயாளிக்கு தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ரஷ்யாவின் தூரக்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 8.8 ஆக பதிவானது. ஒரு மருத்துவமனையின் டாக்டர்கள், அறுவை சிகிச்சை அறையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போது, நிலநடுக்கம் ஏற்பட்டதால், ஒரு பெரிய சவாலை எதிர் கொண்டனர்.
மருத்துவமனையில் இருந்து வைரலாகும் ஒரு சிசிடிவி வீடியோவில், பூகம்ப அதிர்வுகள் ஏற்பட்டபோதும், டாக்டர்கள் குழு ஒன்று பதற்றம் அடையாமல் நோயாளிக்கு தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர் ஒருவருக்கு உறுதுணையாக நான்கு நர்ஸ்கள் உடன் இருந்தனர். நில அதிர்வுகள் ஏற்பட்டதும் அவர்கள் நோயாளி படுத்திருக்கும், கட்டிலை இறுக்கிப் பிடிக்கும் காட்சி வீடியோவில் இடம் பெற்று, அனைவருக்கும் ஆனந்த கண்ணீரை வரவழைத்துள்ளது.
இந்த சம்பவம் ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்தது. டாக்டர்கள் அர்ப்பணிப்புடன் பணி செய்யும் வீடியோ வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.உயிர் காக்கும் கடவுள் டாக்டர்கள் என நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு பாராட்டியுள்ளனர்.




மேலும்
-
இந்திய நலன்களில் சமரசம் இல்லை : அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்
-
டிஎஸ்பி சுந்தரேசன் குற்றம் சாட்டிய இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
-
ஊழல் குற்றச்சாட்டு: லிதுவேனியா பிரதமர் திடீர் ராஜினாமா
-
கனமழை, வெள்ளம் பாதிப்பால் சீனாவில் 44 பேர் பலி
-
ஜாதியும், மதமும் தான் இங்கு அரசியலை தீர்மானிக்கிறது; சீமான் ஆவேசம்
-
ஊர்க்காவல் படையினர் பிரச்னைக்கு இதுதான் காரணம்: சொல்கிறார் சீமான்