முன்னிலை பெற்றது நியூசிலாந்து: கான்வே, மிட்செல் அரைசதம்

புலவாயோ: கான்வே, டேரில் மிட்செல் அரைசதம் கடந்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் 307 ரன் எடுத்த நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றது.
ஜிம்பாப்வே சென்றுள்ள நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி புலவாயோவில் நடக்கிறது. ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 149 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 92/0 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் விக்கெட்டுக்கு 92 ரன் சேர்த்த நிலையில் வில் யங் (41) அவுட்டானார். ஹென்ரி நிக்கோல்ஸ் (34) ஓரளவு கைகொடுத்தார். ரச்சின் ரவிந்திரா (2) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய கான்வே 88 ரன்னில் ஆட்டமிழந்தார். டாம் பிளன்டெல் (2), பிரேஸ்வெல் (9), கேப்டன் சான்ட்னர் (19) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய டேரில் மிட்செல் (80) அரைசதம் கடந்தார். நாதன் ஸ்மித் (22) 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆனார். முதல் இன்னிங்சில் 307 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆன நியூசிலாந்து 158 ரன் முன்னிலை பெற்றது.
பின் 2வது இன்னிங்சை துவக்கிய ஜிம்பாப்வே அணிக்கு பென் கர்ரான் (11), பிரையன் பென்னட் (18) ஏமாற்றினார். ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 31/2 ரன் எடுத்திருந்தது.
மேலும்
-
71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: ' பார்க்கிங் ' படத்துக்கு 3 தேசிய விருது
-
சட்டம் ஒழுங்கு எங்கு இருக்கிறது: சீமான் கேள்வி
-
திரும்பத் திரும்ப பழி சுமத்தும் ராகுல்; அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது தேர்தல் கமிஷன்!
-
ரூ.15 ஆயிரம் சம்பளம் வாங்கிய கிளார்க்கிற்கு ரூ.30 கோடி சொத்து : லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிர்ச்சி
-
போலீசாருகே மிரட்டல் விடுத்த ரவுடி கும்பல்; அதிர்ச்சி வீடியோ வெளியிட்டு அண்ணாமலை வருத்தம்
-
ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி: 7.5 சதவீதம் அதிகம்