இன்டர் மயாமி வெற்றி: மெஸ்சி அபார ஆட்டம்

போர்ட் லாடர்டேல்: லீக்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்சி 'அசிஸ்ட்' செய்து கைகொடுக்க இன்டர் மயாமி அணி 2-1 என, அட்லாஸ் அணியை வீழ்த்தியது.
கனடா, அமெரிக்காவில், லீக்ஸ் கோப்பை கால்பந்து 5வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் இன்டர் மயாமி, அட்லாஸ் அணிகள் மோதின. இதில் இன்டர் மயாமி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஒரு போட்டியில் விளையாட விதிக்கப்பட்ட தடைக்கு பின் மீண்டும் களமிறங்கிய இன்டர் மயாமி அணியின் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்சி, சகவீரர்கள் செகோவியா (58வது நிமிடம்), மார்சிலோ வெய்காண்ட் (90+6வது நிமிடம்) தலா ஒரு கோல் அடிக்க உதவினார். ஆட்ட நாயகன் விருதை மெஸ்சி தட்டிச் சென்றார்.
கடைசியாக விளையாடிய 5 போட்டியில், 8 கோல், 3 'அசிஸ்ட்' என அசத்திய மெஸ்சி, மேஜர் லீக் கால்பந்து தொடரில் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை கைப்பற்றினார். இந்த ஆண்டு இன்டர் மயாமி அணிக்காக 18 போட்டியில், 18 கோல், 7 'அசிஸ்ட்' செய்துள்ளார் மெஸ்சி.
மேலும்
-
71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: ' பார்க்கிங் ' படத்துக்கு 3 தேசிய விருது
-
சட்டம் ஒழுங்கு எங்கு இருக்கிறது: சீமான் கேள்வி
-
திரும்பத் திரும்ப பழி சுமத்தும் ராகுல்; அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது தேர்தல் கமிஷன்!
-
ரூ.15 ஆயிரம் சம்பளம் வாங்கிய கிளார்க்கிற்கு ரூ.30 கோடி சொத்து : லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிர்ச்சி
-
போலீசாருகே மிரட்டல் விடுத்த ரவுடி கும்பல்; அதிர்ச்சி வீடியோ வெளியிட்டு அண்ணாமலை வருத்தம்
-
ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி: 7.5 சதவீதம் அதிகம்