பிரான்ஸ் வீரர் 'தங்கம்': உலக நீச்சல் போட்டியில்

சிங்கப்பூர்: உலக நீச்சல் போட்டிக்கான 200 மீ., தனிநபர் 'மெட்லே' பிரிவில் பிரான்சின் லியோன் மார்ச்சந்த் தங்கம் வென்றார்.
சிங்கப்பூரில், உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 200 மீ., தனிநபர் 'மெட்லே' பிரிவு பைனலில், பந்தய துாரத்தை ஒரு நிமிடம், 53.68 வினாடியில் கடந்த பிரான்சின் லியோன் மார்ச்சந்த் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். பாரிஸ் ஒலிம்பிக்கில் 4 தங்கம் கைப்பற்றிய இவர், அரையிறுதியில் உலக சாதனை (1 நிமிடம், 52.69 வினாடி) படைத்திருந்தார். இது, உலக சாம்பியன்ஷிப் அரங்கில் மார்ச்சந்த் கைப்பற்றிய 6வது தங்கம்.
வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே அமெரிக்காவின் ஷைன் காசாஸ் (1:54.30), ஹங்கேரியின் ஹூபர்ட் கோஸ் (1:55.34) கைப்பற்றினர்.
மெக்கின்டோஷ் 'ஹாட்ரிக்': பெண்களுக்கான 200 மீ., 'பட்டர்பிளை' பிரிவு பைனலில் இலக்கை 2 நிமிடம், 01.99 வினாடியில் கடந்த கனடாவின் சம்மர் மெக்கின்டோஷ், முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இது, இம்முறை இவர் கைப்பற்றிய 'ஹாட்ரிக்' தங்கம். ஏற்கனவே 200 மீ., 'மெட்லே', 400 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் தங்கம் வென்றிருந்தார். தவிர இது, உலக சாம்பியன்ஷிப் அரங்கில் இவர் வென்ற 7வது தங்கம்.
அடுத்த இரு இடங்களை கைப்பற்றிய அமெரிக்காவின் ரீகன் ஸ்மித் (2:04.99), ஆஸ்திரேலியாவின் எலிசபெத் டெக்கர்ஸ் (2:06.12) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
மேலும்
-
71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: ' பார்க்கிங் ' படத்துக்கு 3 தேசிய விருது
-
சட்டம் ஒழுங்கு எங்கு இருக்கிறது: சீமான் கேள்வி
-
திரும்பத் திரும்ப பழி சுமத்தும் ராகுல்; அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது தேர்தல் கமிஷன்!
-
ரூ.15 ஆயிரம் சம்பளம் வாங்கிய கிளார்க்கிற்கு ரூ.30 கோடி சொத்து : லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிர்ச்சி
-
போலீசாருகே மிரட்டல் விடுத்த ரவுடி கும்பல்; அதிர்ச்சி வீடியோ வெளியிட்டு அண்ணாமலை வருத்தம்
-
ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி: 7.5 சதவீதம் அதிகம்