கல் பந்தல் அமைக்க மானியம் விவசாயிகளுக்கு அழைப்பு
சேலம், சேலம் மாவட்டத்தில், தோட்டக்கலைத்துறை மூலம் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா திட்டத்தில், 2025 - 26ல், நிரந்தர கல் பந்தல் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கல் பந்தல் அமைத்து கொடி வகை காய்கறி சாகுபடி செய்து விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்க, 50 சதவீத மானியம்.
அதாவது ெஹக்டேருக்கு, 3 லட்சம் ரூபாய் மானியம் பெறலாம். ஆதிதிராவிடர், பழங்
குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதல் மானியமாக, 20 சதவீதம்.
அதாவது ெஹக்டேருக்கு, 20,000 ரூபாய் கிடைக்கும். விரும்பும் விவசாயிகள் TN Hortnet மற்றும் உழவர் செயலியில் விபரத்தை பூர்த்தி செய்து சிட்டா, ஆதார், ரேஷன் கார்டு நகல்கள், 2 போட்டோ, நில வரைபடம் அடங்கல், ஆதிதிராவிடர், பழங்குடியினத்தவராக இருந்தால் சிறு குறு விவசாயி சான்றிதழ், ஜாதி சான்றிதழுடன், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.