ேஹாமியோபதி கல்லுாரி பேராசிரியை தற்கொலை
சேலம், சென்னை, அரும்பாக்கத்தை சேர்ந்த அரவிந்தன் மகள் திவ்யா, 30. சேலம், சீரகா
பாடியில் விடுதியில் தங்கி, அரியானுாரில் உள்ள தனியார் ேஹாமியோபதி கல்லுாரியில், 2 ஆண்டாக பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம், அவர், பணிக்கு செல்லவில்லை. உடன் பணிபுரியும் பேராசிரியை ஷில்பா உள்பட சிலர், நேற்று மாலை, 4:00 மணிக்கு விடுதிக்கு சென்று பார்த்தபோது, அறைக்குள் உட்புறம் தாழிட்டபடி மின்விசிறியில் திவ்யா, துாக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
ஆட்டையாம்பட்டி போலீசார் வந்து, திவ்யா உடலை கைப்பற்றி, சென்னையில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விசாரிக்கின்றனர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement