'உங்களுடன் ஸ்டாலின்' கலெக்டர் ஆய்வு

கெங்கவல்லி, தம்மம்பட்டி, உடையார்பாளையத்தில் உள்ள அண்ணா சமுதாயக்கூடத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்த பின் அவர் கூறியதாவது:

கடந்த, 15ல் தொடங்கப்பட்ட, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், வரும் நவம்பர் வரை நகர் பகுதியில், 168 முகாம், ஊரகத்தில், 264 என, 432 முகாம்கள் மூலம் மக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்படவுள்ளது. பல்வேறு துறைகள் சார்பில் இதுவரை, 3,725 கோரிக்கை மனுக்களும், மகளிர் உரிமைத்தொகை கேட்டு, 3,080 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.மேலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம், மனுக்களை சரியான முறையில் பெறும் வகையில் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தினார்.

Advertisement