மொபைல் போன் திருடி வசமாக சிக்கியவர் கைது
சேலம், சேலம், கருப்பூர், மரக்கடை மெடிக்கல் பின்புற பகுதியை சேர்ந்தவர் பூவரசன், 27. நேற்று காலை, 11:00 மணிக்கு, கருப்பூர் இன்ஜினியரிங் கல்லுாரி விடுதியில் புகுந்து மொபைல் போன் திருடியுள்ளார். தொடர்ந்து கருப்பூர் பெண்கள் தொழிற்பூங்கா சென்ற அவர், அங்குள்ள தனியார் நிறுவன செக்யூரிட்டி அறைக்குள் புகுந்து, செக்யூரிட்டி சக்திவேலின் மொபைல் போனை திருடிக்கொண்டு வெளியே வந்தார்.
அப்போது கையும், களவுமாக சிக்கிய அவரை, கருப்பூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், 2 மொபைல் போன் திருடியதை ஒப்புக்கொண்டார். அத்துடன் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement