'சிலிண்டர் வினியோகம் தடையின்றி தொடரும்'

சேலம், இந்தியன் ஆயில் நிறுவன தெற்கு மண்டல தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் அறிக்கை:தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எல்.பி.ஜி., சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கம், ஆக., 1 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தது

இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், லாரி உரிமையாளர் சங்கத்துடன் பேச்சு நடத்தப்பட்டது. இதன்படி, அவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற ஒப்புக்கொண்டனர். அதனால் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் வினியோகம் தடையின்றி தொடரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement