திருமணம் செய்வதாக 11 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி ஏமாற்றியவர் மீது வழக்கு

வேலுார், வேலுாரில் திருமணம் செய்து கொள்வதாக கூறி, 11 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி ஏமாற்றிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வேலுார், ஓல்டு டவுன், உத்திரமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் தோனி எழிலரசன், 35. இவர், வேலுாரிலுள்ள கல்லுாரியில் கடந்த, 2014-ம் ஆண்டு படித்தபோது தன்னுடன் படிக்கும் பாகாயத்தை சேர்ந்த மாணவியை காதலித்தார். அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை தனிமையில் இருந்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய மாணவிக்கு, தோனி எழிலரசன் மறுப்பு தெரிவித்தார். இதனால் கடந்த, 2014ல் வேலுார் அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் அளித்தார்

. அப்போது போலீசார் தோனி எழிலரசன் மீது வழக்குப்பதிந்து விசாரித்தபோது, மாணவியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததால், மாணவி புகாரை வாபஸ் பெற்றார். இந்நிலையில் கடந்த, 11 ஆண்டுகளாக அப்பெண்ணிடம் குடும்பம் நடத்தி வந்தவர், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார். இது குறித்து அப்பெண், மீண்டும் நேற்று வேலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement