இயக்குனர் ரஞ்சித்துக்கு ஜாமின்

நாகப்பட்டினம்:நாகை அருகே படப்பிடிப்பில், ஸ்டண்ட் மாஸ்டர் இறந்த சம்பவத்தில், இயக்குனர் ரஞ்சித்துக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

நாகை மாவட்டம், கீழையூர் அருகே ரஞ்சித் இயக்கத்தில் 'வேட்டுவம்' என்ற படத்தின் படப்பிடிப்பு ஜூலை 13ம் தேதி நடந்தது. அப்போது, கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டபோது, ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் என்பவர் காருடன் மேலே பறந்து கீழே விழும் போது உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக, திரைப்பட இயக்குனர் ரஞ்சித், சண்டை கலைஞர் வினோத், திரைப்பட தயாரிப்பு நிறுவன நிர்வாகி ராஜ்கமல், வாகன உரிமையாளர் பிரபாகரன் ஆகிய நான்கு பேர் மீது, கீழையூர் போலீசார் வழக்கு பதிந்தனர்.

இவ்வழக்கில் ரஞ்சித் தவிர, மற்ற மூவர் ஏற்கனவே ஜாமின் பெற்றுள்ளனர். இயக்குனர் ரஞ்சித் நாகை மாவட்டம் கீழ்வேளூர், உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். நேற்று ரஞ்சித் ஆஜரானார். நீதிபதி மீனாட்சி, அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Advertisement