மேட்டூர் அணை நீர் திறப்பு 50,000 கன அடியாக குறைப்பு
மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர்வரத்து அதிகரிப்பால் ஜூலை 25ல், நடப்பாண்டில், 4ம் முறை மேட்டூர் அணை நிரம்பியது. தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து அதிகளவில் நீர், காவிரியாற்றில் திறக்கப்பட்டது.
அதன்படி ஜூலை 28 இரவு, 7:00 மணிக்கு மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு, 1.10 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
அதற்கேற்ப அணையில் இருந்து வினாடிக்கு, 18,000 கனஅடி நீர், அனல்மின் நிலையங்கள் வழியாக பாசனத்துக்கும், மீதி, 92,000 கனஅடி உபரிநீர், 16 கண் மதகு வழியாகவும் வெளியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் வரை அதே நிலை நீடித்தது.
இந்நிலையில், பருவமழை குறைந்து கர்நாடகா அணைகளின் நீர்வரத்து குறைந்தது. அதற்கேற்ப கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு வினாடிக்கு, 1.10 லட்சம் கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து காலை, 9:00 மணிக்கு, 70,000 கனஅடி, மதியம், 1:00 மணிக்கு, 50,000 கனஅடியாக சரிந்தது.
இதற்கேற்ப நேற்று மதியம், 1:00 மணிக்கு அணையில் இருந்து வினாடிக்கு, 18,000 கனஅடி நீர் பாசனத்துக்கும், 16 கண் மதகு வழியே உபரியாக 32,000 கனஅடி நீரும் காவிரியில் வெளியேற்றப்பட்டது.
மேலும்
-
பகிங்ஹாம் - உத்தண்டி கடல் வரை மூடு கால்வாய்தப்புமா தென்சென்னை? பருவமழை பாதிப்பை தடுக்க நீர்வளத்துறை முயற்சி
-
மாணவரை காரை ஏற்றி கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் சரண்
-
செய்திகள் சில வரிகளில்
-
நள்ளிரவில் உறவினர்கள் தாக்குதல் காதல் ஜோடியை மீட்ட போலீசார்
-
'மெட்ரோ'வில் 150 கி.மீ., நடைபாதை
-
பெண் துாய்மை பணியாளர் உயிரிழப்பு இழப்பீடு வழங்கக்கோரி போராட்டம்