வீடு புகுந்து கொள்ளை முயற்சி 4 மலேஷிய நாட்டினர் கைது

திருத்துறைப்பூண்டி,:திருத்துறைப்பூண்டியில், கத்தியை காட்டி மிரட்டி, கொள்ளையடிக்க முயன்ற, மலேஷிய நாட்டினர் நான்கு பேர் கைது செய்யப் பட்டனர்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 50. இவரது வீட்டில், நேற்று முன்தினம் இரவு, ஐந்து பேர் கொண்ட கும்பல், கத்தியை காட்டி மிரட்டி, கொள்ளை அடிக்க முயன்றது. வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார், நான்கு பேரையும் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் மலேஷிய நாட்டை சேர்ந்த சரவணன், 44, இளவரசன், 26, கோபி, 35, விமலன், 19, என, தெரிந்தது.

சுற்றுலாவாக தமிழகம் வந்த அவர்கள், திருத்துறைப்பூண்டியில் ஒரு வீட்டில் தங்கியுள்ளனர். செலவிற்கு பணம் இல்லாததால், கொள்ளை அடிக்க திட்டமிட்டதாக அவர்கள் கூறினர். இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்தனர். கொள்ளை அடிக்க முயன்ற வீடு, போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement