முந்திரி தோப்பில் ஆண் சடலம்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த அரசடிகுப்பம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார், 36; கூலித் தொழிலாளி. இவரது மனைவி மேரி கவுசல்யா. மனைவியை பிரிந்து பிரவீன்குமார் சென்னையில் தங்கி வேலை செய் தார்.

இந்நிலையில், அரசடிக்குப்பத்திற்கு வந்த பிரவீன்குமார் சத்திரம் கிராமத்தில் நடந்த பாட்டு கச்சேரி பார்க்க சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பில்லை.

குடும்பத்தினர் தேடி பார்த்த போது, நேற்று அரசடிக்குப்பம் முந்திரி தோப்பில் சடலமாக கிடந்தது தெரிந்தது. புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement