வாலிபருக்கு அரிவாள் வெட்டு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் முன்விரோத தகராறில் உறவினரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம், மணலுாரைச் சேர்ந்தவர் அறிவரசன், 47; மனைவி, மகன், மகள் உள்ளனர். துபாயில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்த இவர், கடந்த மே மாதம் ஊருக்கு திரும்பினார். இந்நிலையில், எதிர்வீட்டை சேர்ந்த உறவினர் ராஜபிரபு, 45, என்பவருக்கும் முன்விரோத தகராறு உள்ளது.

இந்நிலையில், நேற்று காலை 11:00 மணிக்கு வங்கிக்கு செல்ல வீட்டிலிருந்து மொபட்டை எடுத்து வெளியே வந்த அறிவரசனை, ராஜபிரபு மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

அதில், படுகாயமடைந்த அறிவரசன், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்குப் பதிந்து ராஜபிரபுவை கைது செய்தார்.

Advertisement