ஏலம் புறக்கணிப்பு: விவசாயிகள் பாதிப்பு

விருத்தாசலம்: இ-நாம் திட்டத்தில் பணம் செலுத்தும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, விருத்தாசலம் கமிட்டியில் வியாபாரிகள் ஏலத்தை புறக்கணித்தனர்.

விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் கொள்முதல் செய்யப்படும் நெல் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களுக்கு உரிய தொகையை வியாபாரிகளிடம் இருந்து பெற்று, மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் சார்பில் விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், இ-நாம் திட்டத்தின் கீழ் (மின்னணு தேசிய வேளாண் சந்தை) பணப் பட்டுவாடாவில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்கும் வகையில், விளைபொருட்களுக்கு உரிய தொகையை வியாபாரிகளே நேரடியாக ஆன்லைன் மூலம் விவசாயிகளுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டது.

இதனையேற்காத வியாபாரிகள், நேற்று ஏலத்தில் பங்கேற்காமல், கொள்முதல் பணியை புறக்கணித்தனர். நாளை (இன்று) ஏலம் நடைபெறுமா என தெரியாமல் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Advertisement