நிமிஷா பிரியாவின் தண்டனை இன்னும் ரத்தாகவில்லை: காப்பாற்ற அனைத்து முயற்சியும் மேற்கொள்வதாக அரசு அறிவிப்பு

புதுடில்லி: நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனை ஒத்தி மட்டுமே வைக்கப்பட்டு உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நிருபர்களிடம் கூறியதாவது:
இது (நிமிஷா பிரியா வழக்கு) ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம். இந்த வழக்கில் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. எங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் விளைவாக தண்டனை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
பிரியா மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நாட்டின் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கின்றனர்.
இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து சாத்தியமான உதவிகளை செய்து வருகிறோம். இதில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வந்த செய்திகள் தவறானவை.
நிமிஷா பிரியா வழக்கு தொடர்பாக சரிபார்க்கப்படாத அறிக்கைகள், தவறான தகவல்களில் இருந்து பொதுமக்கள், ஊடகங்கள் விலகி இருக்க வேண்டும். மரண தண்டனை முற்றிலும் ரத்து செய்யப்பட்டதாக கூறும் செய்திகள் தவறானவை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, கேரள நர்சான நிமிஷா பிரியாவுக்கு ஏமன் நாடு விதித்த தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, அதன் பின்னர் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தண்டனை ரத்தாகவில்லை, ஒத்தி மட்டுமே வைக்கப்பட்டு உள்ளது என்பது தெளிவாகி இருக்கிறது.



மேலும்
-
காஷ்மீரில் 'ஆப்பரேஷன் அகல்' நடவடிக்கை; பயங்கரவாதி சுட்டுக்கொலை
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு
-
'நம் உள்ளத்தை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும்'
-
குப்பை சேகரிப்பு பணி நடக்க போன் பண்ணினால் போதும்
-
எஸ்.டி.பி., அமைக்கும் பிரச்னை விளக்க கூட்டம் ஒத்திவைப்பு
-
மாநகராட்சி அலுவலகங்களில் அன்றாட பணிகள் பாதிப்பு