ரூ.22,704 கோடி செலவில் நீர்மின் திட்டம்: காஷ்மீர் செனாப் நதி மீது கட்ட அரசு முடிவு
புதுடில்லி:ஜம்மு - காஷ்மீரில் செனாப் நதி மீது, 22,704 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட நீர்மின் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் ஏப்., 22ல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின், அந்நாட்டிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
குறிப்பாக, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியது.
இது தொடர்பாக, நேற்று முன்தினம் பார்லி.,யில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “எக்காரணத்தைக் கொண்டும் சிந்துநதி நீர் பாகிஸ்தானுக்கு பாயாது,” என, திட்டவட்டமாக தெரிவித்தார்.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்படி, இந்தியாவும், பாகிஸ்தானும் தலா மூன்று நதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
1,856 மெகாவாட் உலக வங்கியால், 1960ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, பியாஸ், சட்லெஜ், ரவி நதிகளின் நீர் மீது நம் நாட்டுக்கு முழு உரிமைகள் உள்ளன.
சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் நீர் மீது பாகிஸ்தானுக்கு உரிமை உண்டு. அவற்றில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள செனாப் நதி மீது, பிரமாண்டமான சாவல்கோட் நீர்மின் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக, 1,856 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
இருதரப்பு ஒப்பந்தத்தை மீறாத வகையில், செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்துக்கு ஏறக்குறைய, 22,704 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சாவல்கோட் நீர்மின் திட்டத்தை இரண்டு கட்டங்களாக முடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தை, 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே செயல்படுத்த இந்தியா முயன்றது. பாகிஸ்தானின் எதிர்ப்பு உட்பட பல்வேறு காரணங்களால், அது சாத்தியமாகவில்லை.
கூட்டு முயற்சி தற்போது, பாகிஸ்தானுடன் மோதல் நிலவுவதால், இதை வாய்ப்பாக பயன்படுத்தி, நீர்மின் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து, இந்த திட்டத்துக்கான ஒப்பந்தங்களை தேசிய நீர்மின் கழகம் கோரிஉள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் மின் மேம்பாட்டு கழகத்தின் கூட்டு முயற்சியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என, அந்த கழகம் தெரிவித்துஉள்ளது. இந்த பிரமாண்ட திட்டத்திற்காக, 3,000 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வன நிலத்தைப் பயன்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வன ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள செனாப் நதி மீது வருகிறது பிரமாண்டமான சாவல்கோட் நீர்மின் திட்டம்
மொத்த செலவு 22,704 கோடி ரூபாய்
1,856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி
பாகிஸ்தான் உடனான மோதல் காரணமாக அந்நாட்டின் அனுமதி தேவையில்லை.
மேலும்
-
டிரம்ப் அறிவித்த வரிவிதிப்பில் சிக்கிய 70 நாடுகள்; இதோ முழு பட்டியல்
-
ஹெல்மெட் இல்லையா, பெட்ரோலும் இல்லை: இந்தூரில் நடைமுறைக்கு வந்தது புதிய விதி
-
சீன நீச்சல் வீராங்கனை வெண்கலம்: 12 வயதில் சாதனை
-
திமுகவை எதிர்த்து கொடுப்பது அதிமுக பாஜ தான்: இபிஎஸ்
-
உலக விளையாட்டு செய்திகள்
-
ஸ்வெரேவ் 500வது வெற்றி: ஏ.டி.பி., டென்னிஸ் ஒற்றையரில்