சீன நீச்சல் வீராங்கனை வெண்கலம்: 12 வயதில் சாதனை

சிங்கப்பூர்: உலக நீச்சல் போட்டியில் 12 வயதான சீனாவின் யூ ஜிடி வெண்கலம் வென்றார்.
சிங்கப்பூரில், உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்கள் அணிகளுக்கான 4x200 மீ., 'பிரீஸ்டைல் ரிலே' பைனலில், பந்தய துாரத்தை 7 நிமிடம், 42.99 வினாடியில் கடந்த சீனா, 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றியது. முதலிரண்டு இடங்களை ஆஸ்திரேலியா (7:39.35), அமெரிக்கா (7:40.41) தட்டிச் சென்றன.
சீன அணியில் 12 வயதான யூ ஜிடி இடம் பெற்றிருந்தார். உலக நீச்சல் சாம்பியன்ஷிப் அரங்கில் இளம் வயதில் பதக்கம் வென்ற வீராங்கனையானார். சர்வதேச நீச்சல் போட்டியில், 1936க்கு பின் இளம் வயதில் பதக்கம் கைப்பற்றிய வீராங்கனையானார் யூ ஜிடி. இதற்கு முன், பெர்லின் ஒலிம்பிக்கில் (1936, ஜெர்மனி) டென்மார்க் வீராங்கனை சோரன்சென் (12 வயது), 200 மீ., 'பிரஸ்ட்ஸ்டிரோக்' பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார்.
தனிநபர் 200 மீ., 'மெட்லே', 200 மீ., 'பட்டர்பிளை' பிரிவு பைனலுக்கு முன்னேறிய யூ ஜிடி, 4வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். அடுத்து 400 மீ., தனிநபர் 'மெட்லே' பிரிவில் விளையாட உள்ளார்.
ரோகித் ஏமாற்றம்: ஆண்களுக்கான தனிநபர் 100 மீ., 'பட்டர்பிளை' பிரிவில் இந்தியாவின் ரோகித் பெனடிக்டன் 21, பங்கேற்றார். தகுதிச் சுற்றில் இலக்கை 53.92 வினாடியில் கடந்த ரோகித், ஒட்டுமொத்தமாக 47வது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.
மேலும்
-
காஷ்மீரில் 'ஆப்பரேஷன் அகல்' நடவடிக்கை; பயங்கரவாதி சுட்டுக்கொலை
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு
-
'நம் உள்ளத்தை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும்'
-
குப்பை சேகரிப்பு பணி நடக்க போன் பண்ணினால் போதும்
-
எஸ்.டி.பி., அமைக்கும் பிரச்னை விளக்க கூட்டம் ஒத்திவைப்பு
-
மாநகராட்சி அலுவலகங்களில் அன்றாட பணிகள் பாதிப்பு