ஸ்வெரேவ் 500வது வெற்றி: ஏ.டி.பி., டென்னிஸ் ஒற்றையரில்

டொரான்டோ: ஏ.டி.பி., டென்னிஸ் ஒற்றையரில் ஜெர்மனியின் ஸ்வெரேவ், தனது 500வது வெற்றியை பதிவு செய்தார்.

கனடாவின் டொரான்டோ நகரில், நேஷனல் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-7, 6-3, 6-2 என்ற கணக்கில் இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியை வீழ்த்தினார். இது, ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவில் ஸ்வெரேவ் பெற்ற 500வது வெற்றியானது. இதுவரை 712 போட்டியில், 500 வெற்றி, 212 தோல்வியை பதிவு செய்துள்ளார்.
இதன்மூலம் 1988க்கு பின் பிறந்து, ஏ.டி.பி., ஒற்றையரில் 500 வெற்றியை பதிவு செய்த முதல் வீரரானார் ஸ்வெரேவ். தவிர இவர், தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில் 500 போட்டியில் வென்ற 5வது வீரரானார். ஏற்கனவே ஜோகோவிச் (செர்பியா, 1150 வெற்றி), மோன்பில்ஸ் (பிரான்ஸ், 583), வாவ்ரின்கா (சுவிட்சர்லாந்து, 580), மரின் சிலிக் (குரோஷியா, 593) இப்படி சாதித்தனர். 'ஓபன் எரா'வில் இம்மைல்கல்லை எட்டிய 57வது வீரரானார் ஸ்வெரேவ்.
கடந்த 2013ல் ஏ.டி.பி., அரங்கில் காலடி வைத்த ஸ்வெரேவ் 28, இதுவரை ஒற்றையரில் 24 பட்டம் கைப்பற்றி உள்ளார்.

Advertisement