ஹெல்மெட் இல்லையா, பெட்ரோலும் இல்லை: இந்தூரில் நடைமுறைக்கு வந்தது புதிய விதி

இந்தூர்; இந்தூரில், ஹெல்மெட் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது என்ற புதிய விதி தற்போது அமலுக்கு வந்துள்ளது.
இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அனைத்து மாநிலங்களும் அறிவுறுத்தி வருகின்றன. சில மாநிலங்களில் இந்த நடைமுறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் உத்தரவாகவும், சில மாநிலங்களில் அறிவுறுத்தலாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஹெல்மெட் இல்லாமல் வாகனங்களின் சென்று விபத்தில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் இன்று (ஆக.1) முதல் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் வினியோகிக்க வேண்டும் என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.
இதற்காக சிறப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு, பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முறையாக செயல்படுகிறதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, ஹெல்மெட் இல்லாமல் வந்த வாகன ஓட்டிக்கு பெட்ரோல் தந்ததால் அரந்தியா பைபாஸ் சாலையில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

மேலும்
-
காஷ்மீரில் 'ஆப்பரேஷன் அகல்' நடவடிக்கை; பயங்கரவாதி சுட்டுக்கொலை
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு
-
'நம் உள்ளத்தை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும்'
-
குப்பை சேகரிப்பு பணி நடக்க போன் பண்ணினால் போதும்
-
எஸ்.டி.பி., அமைக்கும் பிரச்னை விளக்க கூட்டம் ஒத்திவைப்பு
-
மாநகராட்சி அலுவலகங்களில் அன்றாட பணிகள் பாதிப்பு