உலக விளையாட்டு செய்திகள்

அரையிறுதியில் போலந்து
தாஷ்கென்ட்: உஸ்பெகிஸ்தானில் நடக்கும் ஆண்களுக்கான (19 வயது) உலக வாலிபால் சாம்பியன்ஷிப் காலிறுதியில் போலந்து, தென் கொரியா அணிகள் மோதின. இதில் போலந்து அணி 3-2 (25-17, 24-26, 27-25, 19-25, 15-13) என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ரிபாகினா வெற்றி
மான்ட்ரியல்: கனடாவின் மான்ட்ரியலில் நடக்கும் நேஷனல் பாங்க் ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-0, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ருமேனிய வீராங்கனை ஜாக்குலின் கிறிஸ்டியனை வீழ்த்தினார்.
ஜெர்மனி அதிர்ச்சி
பெல்கிரேடு: செர்பியாவில் நடக்கும் 'யூரோ' கூடைப்பந்து (18 வயது) காலிறுதியில் ஜெர்மனி, லாட்வியா அணிகள் மோதின. ஜெர்மனி 79-80 என அதிர்ச்சி தோல்வியடைந்தது. மற்றொரு காலிறுதியில் இத்தாலி அணி 95-66 என, செர்பியாவை வீழ்த்தியது.
ஹங்கேரி கலக்கல்
போட்கோரிகா: மான்டினெக்ரோவில் நடக்கும் பெண்கள் (17 வயது) ஐரோப்பிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் ஹங்கேரி அணி 35-28 என நார்வேயை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் குரோஷியா 39-29 என, ருமேனியாவை தோற்கடித்தது.
எக்ஸ்டிராஸ்
* துலீப் டிராபி கிரிக்கெட் தொடருக்கான மேற்கு மண்டல அணியின் கேப்டனாக மும்பை 'ஆல்-ரவுண்டர்' ஷர்துல் தாகூர் நியமிக்கப்பட்டார். இந்த அணியில் ஷ்ரேயஸ், ருதுராஜ், ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
* சவுதி அரேபியாவில் நடக்கவுள்ள ஆசிய கோப்பை கூடைப்பந்து 31வது சீசனில் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, ஜோர்டான் (ஆக. 5), சீனா (ஆக. 7), சவுதி அரேபியாவை (ஆக. 9) சந்திக்கிறது.
* டில்லியில், வரும் ஆக. 21ல் நடக்கவுள்ள ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படுகிறது.
* மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் இந்திய கடற்படை அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் காஷ்மீர் அணியை வீழ்த்தியது.
* தாய்லாந்தில் நடக்கும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் (19 வயது) முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சுமன் குமாரி (48 கி.கி.,) 5-0 என சீனதைபேயின் மெங்-சின் செங்கை வீழ்த்தினார்.
மேலும்
-
காஷ்மீரில் 'ஆப்பரேஷன் அகல்' நடவடிக்கை; பயங்கரவாதி சுட்டுக்கொலை
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு
-
'நம் உள்ளத்தை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும்'
-
குப்பை சேகரிப்பு பணி நடக்க போன் பண்ணினால் போதும்
-
எஸ்.டி.பி., அமைக்கும் பிரச்னை விளக்க கூட்டம் ஒத்திவைப்பு
-
மாநகராட்சி அலுவலகங்களில் அன்றாட பணிகள் பாதிப்பு