சிறுமிக்கு பாலியல் தொல்லை வடமாநில வாலிபர் கைது

திருவாலங்காடு, சிறுமியை பாலியல் கொடுமை செய்ய முயன்ற வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் அருகே சென்னை--- - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளில், அசாம் மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்; அங்கு கொட்டகை அமைத்து தங்கியுள்ளனர்.

கனகம்மாசத்திரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமி நேற்று காலை, இயற்கை உபாதை கழிக்க முட்புதர் பக்கமாக சென்றார்.

இதை கண்காணித்த, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹெக்ராமுல் அலி, 26, என்பவர், சிறுமியின் வாயைப்பொத்தி, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அவரிடமிருந்து தப்பிய சிறுமி, ஓடிப்போய் கிராமத்தினரிடம் கூறினார்.

இதையடுத்து, உறவினர்கள் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்டோர், மறைந்திருந்த ஹெக்ராமுல் அலியை பிடித்து, கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement