உலக டேபிள் டென்னிஸ்: இந்திய அணிகள் தகுதி

காத்மாண்டு: உலக டேபிள் டென்னிஸ் தொடருக்கு இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் தகுதி பெற்றன.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில், அணிகளுக்கு இடையிலான தெற்காசிய ரீஜினல் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இந்தியா, மாலத்தீவு, நேபாளம், இலங்கை, வங்கதேசம் என 5 அணிகள் பங்கேற்றன.

ஆண்கள் பிரிவில் இந்திய அணி, தனது முதல் போட்டியில் 3-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தியது. அடுத்து நடந்த போட்டிகளில் இலங்கை (3-0), நேபாளம் (3-0), மாலத்தீவு (3-0) அணிகளை வென்றது. நான்கு போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா, 8 புள்ளிகளுடன் முதலிடத்தை கைப்பற்றியது. இந்தியா சார்பில் ஆகாஷ் பால், ரோனித் பன்ஜா, அனிர்பன் கோஷ், அபினந்த், திவ்யான்ஷ் ஸ்ரீவஸ்தவா பங்கேற்றனர்.
பெண்கள் பிரிவில் கிரித்விகா சின்ஹா, செலினாதீப்தி, தனீஷா, சயாலி வானி, சிண்ட்ரேலா தாஸ் அடங்கிய இந்திய அணி, வங்கதேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு அணிகளை தலா 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி, முதலிடம் பிடித்தது.


புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றிய இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள், அடுத்த ஆண்டு (ஏப். 28 - மே 10) லண்டனில் நடக்கவுள்ள உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றன.

Advertisement