குடும்ப தகராறில் விபரீதம் மனைவி அடித்து கொலை
கோயம்பேடு,
குடும்ப தகராறில், மனைவியை அடித்துக் கொன்ற கணவனை, போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருள்மணி, 45. இவர், அரும்பாக்கம் ஜெய் நகர் மூன்றாவது தெருவில் ஒரு விடுதியில், வார்டனாக பணியாற்றுகிறார்.
அதே விடுதியில், தன் கணவர் ராதாகிருஷ்ணன், 49, மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்தார். ராதாகிருஷ்ணன், திருவல்லிக்கேணியில் உள்ள டீக்கடையில் பணியாற்றுகிறார்.
நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட குடும்ப தகராறில், ராதாகிருஷ்ணன், மனைவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததில், அருள்மணி மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவ பரிசோதனையில், அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
தகவலறிந்து சென்ற கோயம்பேடு போலீசார், அருள்மணி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை வழக்கு பதிவு செய்து, ராதாகிருஷ்ணனை கைது செய்து விசாரிக்கின்றனர்.