இன்று இனிதாக (01.08.2025)

ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில்  நரசிம்மர் சின்ன மாடவீதி புறப்பாடு, மாலை 5:30 மணி, ஆளவந்தார், நரசிம்மர், பெரியாழ்வார் ஆஸ்தானம், மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்  ஆடி வெள்ளியை முன்னிட்டு கற்பகாம்பாள் கோவில் பிரஹார விழா, மாலை 4:30 மணி. சுந்தரமூர்த்தி நாயனார் யானை வாகனத்திலும், சேரமான் பெருமான் நாயனார் குதிரை வாகனத்திலும் புறப்பாடு, மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

ஓம் கந்தாஸ்ரமம்  108 திருவிளக்கு பூஜை, மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

வராஹி அறச்சபை  வராஹி நவராத்திரி, கருப்பு திராட்சை பழச்சாறு அபிஷேகம், காலை 7:00 மணி, ஹோமம், மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை.

தமிழ் வேத பாராயண பக்த ஜன சபை  சுந்தரர் குருபூஜை, திரு பாட்டு முற்றோதல், காலை 8:00 மணி, ஆராதனை, மாலை 5:00 மணி. இடம்: நடராஜர் தமிழ் வேத பாராயண பக்த ஜன சபை, சைதாப்பேட்டை.

தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில்  தீ மிதி திருவிழா நிகழ்ச்சிக் கொடியேற்றம். இடம்: தர்மராஜா கோவில் தெரு, சிந்தாதிரிபேட்டை.

பெரிய பாளையத்தம்மன் கோவில்  ஆடி திருவிழா, மஞ்சள் நீர் அபிஷேகம், காலை 9:00 மணி, கங்கை திரட்டுதல், மாலை 5:00 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பள்ளிக்கரணை.

ஜெய் பிரத்யங்கிரா பீடம்  வளர்பிறை அஷ்டமி ஹோமம், ஆடி வெள்ளி பொங்கல் சிறப்பு பூஜை, காலை 7:00 முதல் 12:00 மணி வரை. இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், சிங்கபெருமாள் கோவில் வழி, வெங்கடாபுரம்.

பொது உங்களுடன் ஸ்டாலின் முகாம்  பொதுமக்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றும், 'உங்களுடன் ஸ்டாலின்' நிகழ்ச்சி, காலை 10:00 மணி. இடம்: சாந்துார் அரங்கம், ஆற்காடு சாலை, மணப்பாக்கம்.

சர்க்கரை நோய் ஒழிப்பு வாரம்  மருத்துவர் எம்.முத்துகுமார் தலைமையிலான இலவச பரிசோதனை முகாம், காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: அங்கு பொட்டிக், 43, ஹபிபுல்லா சாலை, தி.நகர்.

சாரண - சாரணியர் இயக்க விழா  தென்னக ரயில்வே பள்ளிகளுக்கு இடையேயான சாரண - சாரணியர் இயக்க நிறைவு விழா, மாலை 4:00 மணி. இடம்: ரயில்வே இன்ஸ்டிடியூட், பெரம்பூர்.

Advertisement