திருச்சி - ராஜஸ்தான் ரயில்களில் ஒரு பெட்டி கூடுதலாக இணைப்பு

சென்னை,திருச்சி - ராஜஸ்தானுக்கு இயக்கப்படும் இரண்டு விரைவு ரயில்களில், தலா ஒரு பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளது.

பயணியர் நெரிசல் மிக்க வழித்தடங்களில் செல்லும் விரைவு ரயில்களில், கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் - திருச்சி விரைவு ரயிலில், வரும் 4 முதல் 25ம் தேதி வரையில், ஒரு 'ஏசி' பெட்டி இணைத்து இயக்கப்படும்.

இதேபோல், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் - திருச்சி விரைவு ரயிலில், வரும் 6 முதல் 27ம் தேதி வரையில், ஒரு 'ஸ்லீப்பர்' பெட்டி இணைத்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement