தாம்பரம் - விழுப்புரம் ரயில் சேவையில் ஒரு பகுதி ரத்து
சென்னை,ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, தாம்பரம் - விழுப்புரம் தடத்தில், ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
★ தாம்பரம் - விழுப்புரம் காலை 9:45 மணி ரயில், வரும் 5, 9, 18, 23, 25, 30ம் தேதிகளில், முண்டியம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும். விழுப்புரம் - கடற்கரை மதியம் 1:40 மணி ரயில், வரும் 5, 9, 18, 23. 25, 30ம் தேதிகளில், முண்டியம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்
★ திருச்சி - எழும்பூர் விரைவு ரயில், வரும் 20ம் தேதி 11:00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, 12:45 மணிக்கு புறப்பட்டு செல்லும்
★ கடலுார் - கர்நாடகா மாநிலம் மைசூர் விரைவு ரயில், வரும் 20ம் தேதி மாலை 3:40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு செல்லும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Advertisement
https://www.youtube.com/embed/DZexVr2-VC4