கால்நடை குடிநீர் தொட்டிகள் பராமரிப்பதில் அலட்சியம்

திருத்தணி:கால்நடைகளின் தாகம் தீர்ப்பதற்காக ஏற்படுத்திய குடிநீர் தொட்டிகளை பராமரிப்பதில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
திருத்தணி ஒன்றியத்தில் கால்நடைகளின் தண்ணீர் தாகம் தீர்க்கும் வகையில், ஊராட்சி நிர்வாகம் மூலம் முக்கிய கிராமங்களின் நுழைவாயில் பகுதியில் தண்ணீர் தொட்டி கட்டி, தண்ணீர் நிரப்பி வரப்பட்டது.
இதற்காக திருத்தணி ஒன்றிய நிர்வாகம் சார்பில் பல லட்சம் ரூபாய் செலவிடப் பட்டுள்ளன.
விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும் போது, வீட்டிற்கு திரும்பி அழைத்து வரும் போதும் குடிநீர் தொட்டியில் கால்நடைகள் தண்ணீர் குடிக்கின்றன.

இந்நிலையில் பெரும்பாலான கிராமங்களில் கட்டப் பட்டுள்ள தண்ணீர் தொட்டியை பராமரிக்காததால், சுற்றிலும் முள்செடிகள் வளர்ந்தும், தொட்டியில் தண்ணீர் இல்லாமலும் சேதமடைந்து வருகிறது.
இதனால், அரசு பணம் வீணாவதுடன் கால்நடைகளின் தண்ணீர் தாகத்தை தீர்க்க முடியாமல், கால்நடை வளர்ப்போர் அவதிப்படுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, கால்நடை குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரித்து, தண்ணீர் நிரப்ப வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement