நகராட்சி ஒப்பந்த பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்க'

ஈரோடு,கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா நலவாரிய கண்காணிப்புக்குழு கூட்டம், கலெக்டர் கந்தசாமி தலைமையில் ஈரோட்டில் நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், ஈரோடு ஆர்.டி.ஓ., சிந்துஜா, தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி., சின்னசாமி, எல்.பி.எப்., கோபால், சி.ஐ.டி.யு., சுப்பிரமணியம், ஐ.என்.டி.யு.சி., மலைச்சாமி, எல்.எல்.எப்., சிறுத்தைவள்ளுவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கோபி, பவானி, சத்தி, புன்செய் புளியம்பட்டி நகராட்சிகளில் பணி செய்யும் ஒப்பந்த பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை முன் தேதியிட்டு வழங்க வேண்டும். புதிதாக உருவான பெருந்துறை நகராட்சிக்கு நிரந்தர ஆணையரை நியமிக்க
வேண்டும்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்களுக்கு கலெக்டர் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல்நோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டடத்துக்கு தேவையான கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். பெருந்துறை சிப்காட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்.
இதற்காக முத்தரப்பு கூட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும் என்று தொழிற்சங்கங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

Advertisement