போதை பொருள் விற்பனை வி.சி., நிர்வாகி முறையீடு

ஈரோடு, பவானியை சேர்ந்த, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன். ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பெரிய புலியூர் அரசு மேல்நிலை பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு தலைவராக கவுதமி உள்ளார். இவர் கணவருக்கு சொந்தமான மளிகை கடை பெரியபுலியூர் எம்.ஜி.ஆர்.நகரில் உள்ளது. இங்கு பீடி, சிகரெட், ஹான்ஸ், கூல் லீப் உள்ளிட்ட போதை பொருட்களை விற்கின்றனர். இது தொடர்பாக, 2023, 24, 25 ஆண்டுகளில் தலா ஒரு வழக்கு சக்திவேல் மீது பதிவு செய்யப்

பட்டுள்ளது.


ஆனாலும், கவுந்தப்பாடி போலீசார் துணையுடன், போதை பொருள் விற்பனை
தொடர்கிறது. இதனால் கவுதமியை பள்ளி மேலாண்மை குழுவில் இருந்து நீக்குமாறு, பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. எனவே ஆசிரியர்கள் இருவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மனுவில்
தெரிவித்துள்ளார்.

Advertisement