ரகசியமாக நடந்த நகராட்சி கூட்டம்

கோபி, கோபி நகராட்சி மாதாந்திர கூட்டம், கமிஷனர் சுபாஷினி தலைமையில், நகராட்சி அலுவலகத்தில் ரகசியமாக நேற்று நடந்தது. 30 வார்டு கவுன்சிலர்களில், 28 பேர் பங்கேற்றனர். கூட்டத்தில் செய்தியாளர்களை அனுமதிக்கவில்லை.


இதுகுறித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பி, செய்தியாளர்களை அனுமதிக்க வலியுறுத்தினர். கோபி பஸ் ஸ்டாண்டுக்கு எம்.ஜி.ஆர்., பெயரை வைக்க கோரி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 13 பேர், கமிஷனரிடம் மனு கொடுத்தனர். கூட்டத்தில், 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement