சென்னிமலையில் பலியான புள்ளிமான் சிறுத்தை கடித்ததா? நாய்கள் குதறியதா?

சென்னிமலை, சென்னிமலை வனப்பகுதி 1,700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு அதிக எண்ணிக்கையில் மான்கள் வசிக்கின்றன. சென்னிமலை யூனியன் அலுவலக வளாகத்தில், ஒரு புள்ளிமானை தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து, நேற்று காலை கடித்து கொண்டிருந்தன.


இதைப்பார்த்த ஊழியர்கள், நாய்களை விரட்டியடித்து விட்டு, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஊருக்குள் வழிதவறி வந்த மானை, தெருநாய்கள் கடித்து கொன்றதா அல்லது வனத்தை ஒட்டிய பகுதியில், சிறுத்தை கடித்ததால் பலியாகி கிடந்த மானை, இழுத்து வந்து கடித்ததா? என்பது, உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே தெரிய வரும் என்று, வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement