கள் பற்றி விவாதிக்க விஜய், பழனிசாமி தயாரா?

தமிழகத்தில், பிரசார பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவக்கி, சட்டச பை தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் நடிகர் விஜய் ஆகியோர், 'கள் விடுதலை'யில் உடன்பாடா, முரண்பாடா என விவாதிக்க முன்வர வேண்டும்.

தென் மாநிலங்கள் சிலவற்றில் கள் இறக்கவும்; விற்பனைக்கும் அனுமதி இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் ஏன் அனுமதிக்க மறுக்கின்றனர்? கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு நீக்க வேண்டும். அப்படி நீக்கினால், வரும் தேர்தலில், முதல்வர் ஸ்டாலின், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும். தமிழகத்தில் மது விலக்கு கொள்கையை மாற்றி அமைக்க வலியுறுத்தி, வரும் டிசம்பரில், திருச்சியில், 'கள் விடுதலை மற்றும் மதுவிலக்கு மாநாடு' நடத்தப்படும். அதன்பின், கள்ளுக்கு அனுமதி பெறும் விஷயத்தில் எங்கள் தரப்பின் வேகம் அதிகமாகும்.

- நல்லசாமி

தலைவர், தமிழ்நாடு கள் இயக்கம்

Advertisement