'ஆணவ படுகொலைகளை தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?'

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி:
திருநெல்வேலியில் ஆணவக் கொலை அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. தென் மாவட்டங்கள் மட்டுமல்ல; வட, மேற்கு மாவட்டங்களிலும் ஜாதிவாத அரசியல் பரவி வருகிறது.
ஜாதிவாத சக்திகளும், மதவாத சக்திகளும் ஜாதி பெருமிதத்தை அரசியலாக உயர்த்தி பிடிக்கின்றன; ஜாதி பெருமிதத்தின் அடிப்படையில் நடக்கும் கொலைகளை ஊக்கப் படுத்தி வருகின்றன.
இதற்கு, ஜாதிவாத சக்திகளும், மதவாத சக்திகளும் திட்டமிட்டு பரப்புகிற ஜாதி பெருமை அரசியல் தான் முக்கிய காரணம். இதை தடுப்பதற்கு, தேசிய அளவில் ஆணவக் கொலைகள் தடுப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.
ஆனால், தமிழகம் உட்பட பல மாநில அரசுகள், ஆணவக் கொலை தடுப்பு சட்ட கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசு, ஆணவக் கொலைகள் தடுப்பு சட்டத்தை இயற்றலாமா என மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியது.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கருத்து சொல்லாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், ஆணவக் கொலை தொடர்பாக, உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களையும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பின்பற்றவில்லை.
இ து தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முயன்றோம். அவரை சந்திக்க முடியாததால், துறையில் மனு கொடுத்துள்ளோம். எஸ்.சி., - பி.சி., எனும் அடிப் படையில் ஆணவக் கொலைகள் நடப்பதில்லை.
ஓ.பி.சி., சமூகத்தினரிடையே கூட ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்தாலும் கொலைகள் நடக்கின்றன. இது ஒரு சமூக பிரச்னை; இதை தடுக்க, தேசிய அளவிலான சட்டம் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.










மேலும்
-
தசராவுக்கான கஜ பயண ஏற்பாடுகள் தீவிரம்
-
ஆடிப்பெருக்கில் அட்டகாச பரிசு தங்கமயில் ஜூவல்லரி அறிவிப்பு
-
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு தடை
-
விகாஸ் குமார் விகாஸ் ஐ.பி.எஸ்., சஸ்பெண்ட் உத்தரவும் ரத்து
-
100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
-
'மாஜி' அமைச்சரின் மகன், மகளுக்கான சிறை தண்டனையை நிறுத்திய உத்தரவு ரத்து