'ஜாதி அடிப்படையில் தான் நாடு முழுதும் அரசியல்'

7

சென்னை: 'நாடு முழுதும் ஜாதி, மத அடிப்படையில் தான் அரசியல் நடக்கிறது' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

இளை ஞர்கள் ஜாதி பாகுபாடு பார்ப்பது வேதனை அளிக்கிறது. ஜாதி எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வந்தால், நாடு நாசமாக போய்விடும். ஆணவப் படுகொலையை ஆரம்பத்திலேயே வேரோடு அறுக்கவில்லை என்றால், தொடர்ந்து கொண்டே இருக்கும்.

'சமூக நீதி விடுதி' என பெயர் மாற்றம் செய்தால் மட்டும் போதுமா? அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டிய இடத்தில், குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டும் தனியாக விடுதி அமைப்பது ஏன்?

தமிழகம் உட்பட இந்தியா முழுதும், ஜாதி, மதம் அடிப்படையில் தா ன் அரசியல் நடக்கிறது. பா.ஜ.,வை மதவாத கட்சி என கூறிக் கொண்டு, இந்த ஜாதிக்கு இத்தனை தொகுதி, அந்த ஜாதிக்கு இத்தனை தொகுதி என ஒதுக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையை மாற்றி அமைக்கும் காலம் வரும். அப்போது ஜாதிய கொலைகள் நடந்தால், என்னை அழைத்து கேளுங்கள். பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைத்திருப்பது, மிக தவறான முடிவு.

இவ்வாறு கூறினார்.

Advertisement